முதலமைச்சரும் விஜய் ரசிகர் தான்.. PK வந்தது ஏன்? – ஆதவ் அர்ஜுனா பேச்சு!
Author: Hariharasudhan26 February 2025, 12:51 pm
75 வருடமாக கொள்கையைக் கொண்ட நீங்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்? என ஆளும் அரசுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழா இன்று, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமம் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த விழா மேடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
அப்போது பேசிய அவர்ம் “நம் நிரந்தரத் தலைவர், என்னுடைய நண்பர் ஜான் ஆரோக்கியசாமி அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றி. பிறப்பால் ஒருவர் முதலமைச்சராகி விடக்கூடாது என நான் கூறியதற்கு அடுத்து பல சூழ்ச்சிகள் என்னைச் சூழ்ந்தது. அப்போது, தலைவர் விஜயிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதேபோல், 70 வருட அரசியலில் அம்பேத்கரை யாரும் மேடை ஏற்றியது கிடையாது. சாதி அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரியாரை முன்னிலைப்படுத்தியே போலி கபடவாதிகள், ஊழல் படிந்தவர்களின் கைகளில் இன்றைய அரசு உள்ளது. 30 வருடங்களுக்கு முன்னால் எதுவும் இல்லாதவர்கள், இன்று கல்வி நிறுவனங்கள் வரை வளர்ந்துள்ளனர்.
ஆனால், சினிமாத் துறையையும் கையில் வைத்துக்கொண்டுள்ளனர். இப்போது வந்த கொள்கையே இல்லாத நீங்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்பவர்களுக்கு, 75 வருடமாக கொள்கையைக் கொண்டவர்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்? கடந்த 4 வருடங்களில் மட்டும் ரூ.9 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
பொருளாதாரத்தை உருவாக்கி ஊழல் செய்வதைப் பார்க்கும் நிலையில், கடனை உருவாக்கி ஊழல் செய்கின்றனர். அவர்களுக்கு, செட்டிங் செய்வதைத் தவிர வேறெதுவும் தெரியாது. என் தலைவரைப் பார்த்து நீங்கள் ஏன் நடிக்கிறீர்கள்? அவர் போடும் பேண்ட் சட்டையைக் கூட மாற்றாமல் நடிக்கிறீர்கள்.
இதையும் படிங்க: மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
முதல்வரும் உங்கள் ரசிகர் தான். பொதுச் செயலாளருக்கும், ஜான் ஆரோக்கியசாமிக்கும், எனக்கும் பிரச்னை எனப் பேசுகிறீர்கள். நாங்கள் க்ளீனாக இருக்கிறோம். 1967ல் அண்ணா ஏற்படுத்தியது போல, 1977ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தியது, அடுத்தது விஜயால் தமிழக அரசியலில் பிளவு ஏற்படும்
2021ல் திமுக வெற்றி பெற்றதற்கு பிரசாந்த் கிஷோரும் ஒரு காரணம். 1990க்குப் பிறகு திமுகவால் மெஜாரிட்டியாக வெற்றி பெற முடியவில்லை. பிரசாந்த் கிஷோர் நம்முடன் இணைந்து பயணிக்க உள்ளார்” எனக் கூறினார்.