‘கட்சிக்குள்ளேயே எதிர்மறை தாக்கம்’.. ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. திருமாவின் காரணம்!

Author: Hariharasudhan
9 December 2024, 12:45 pm

ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.

சென்னை: இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ்அர்ஜுனா, அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது.

அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,

Aadhav Arjuna Suspended for Six months from VCK by Thiruma

மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இதையும் படிங்க: ’எங்களுக்கு அஜிதா அக்கா தான் வேணும்..’ தவெகவில் கோஷ்டி மோதல்.. நிர்வாகியின் பதில் என்ன?

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

Aadhav Arjuna Suspended for Six months from VCK by Thirumavalavan

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனராக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும், அதிகாரப் பகிர்வு இருத்தல் வேண்டும் உள்ளிட்டவை குறித்து பேசியிருந்தார். இதனை அவர், தவெக தலைவர் விஜய் முன்பு பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!