டும்..டும்..டும். முடிந்த கையோடு, ஆதி – நிக்கி கல்ராணி செய்த காரியம்.. வைரலாகும் தகவல்..!

Author: Rajesh
23 May 2022, 2:34 pm

யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் தான் ஆதியும்இ நிக்கி கல்ராணியும். இந்த படத்தில் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இவர்களது, திருமணம் கடந்த மே 18-ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அன்று இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆதி – நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின.

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி ஏழை மக்களுக்கு செய்த மாபெரும் உதவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள் பலருக்கும், இந்த ஜோடி சார்பில் உணவளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறிகிறது. அவர்களின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…