நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கோலாகலம் : அம்பாள் சன்னிதியில் 2 முறை மட்டுமே கொடியேற்றப்பட்ட கொடிமரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 8:22 am

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பு பெற்றது.

இந்த நிலையில், நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமர்சையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழாவின் 4-ம் நாள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

அதன் பின் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து ரிஷப வாகனத்தில் 4 ரத வீதிகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் 10ம் நாள் காந்திமதி அம்பாளுக்கு முளை கட்டும் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுக்கு 2 முறை மட்டுமே அம்பாள் சன்னிதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!