ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய அமீர்? போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வந்த சம்மன் ; அவரே வெளியிட்ட ஆடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 5:26 pm

ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய அமீர்? போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வந்த சம்மன் ; அவேர வெளியிட்ட ஆடியோ!!!

டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது.

இயக்குனரும், நடிகருமான அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மனை எதிர்கொள்ள தயார் என்று டைரக்டர் அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோ வெளியிட்டுள்ள அமீர், ”ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என் தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்வேன். 100 சதவிகிதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன்” என்றார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…