பாஜகவுடன் அமமுக கூட்டணி என்பது வதந்தி.. ஆனால் அதிமுகவுடன் இணைவது.. டிடிவி தினகரன் ஓபன் டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 12:00 pm

பாஜகவுடன் அமமுக கூட்டணி என்பது வதந்தி.. ஆனால் அதிமுகவுடன் இணைவது.. டிடிவி தினகரன் ஓபன் டாக்!

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தங்கு விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பாஜகவிடனரிடம் தான் கேட்க வேண்டும். அமமுக கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம் அதன் பின் சொல்கிறேன்.

கூட்டணியில் போட்டியிடுவோம் அல்லது தனித்துப் போட்டியிடுவோம் உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும்

ஓபிஎஸ்சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் பயணித்து முடிவெடுத்து பயணிக்கிறோம் அதன்படி பயணிக்கிறோம். வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்

என்னுடைய பார்வையில் அதிமுக இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து.

அமமுக – பாஜக கூட்டணி என்ற தகவல் குறித்த கேள்விக்கு
வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் உறுதியான பிறகு சொல்கிறேன் எதையும் இப்போது சொல்ல இயலாது உறுதியான பின்பு எதை வேண்டுமானாலும் சொல்கிறேன்

கவர்னரின் செயல்பாடு குறித்த கேள்விக்கு ? கவர்னர் அந்தப் பதவிக்கு பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்

அதிமுக ஒண்றிணையும் என சசிகலா கூறிவருவது குறித்த கேள்விக்கு?
பழனிச்சாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை, அமமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனக்கும் விருப்பம் இல்லை, அதிமுக இணைப்பு குறித்து அவர்கள் எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் என தெரியவில்லை என கூறினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!