அகவிலைப்படி உயர்வு என்னாச்சு..? ஆவின் ஊழியர்கள் போராட்டம்.. உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 4:38 pm

அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்கக்கோரி நெல்லையில் ஆவின் பால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அகவிலைப்படியை 3% உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த ஜனவரி 1ம் தேதி மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் கூட, அங்குள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நஷ்டத்தை சுட்டிக்காட்டி நெல்லையில் உள்ள ஆவின் பால் ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்க கோரியும் நெல்லை ஆவின் பால் ஊழியர்கள் இன்று ரெட்டியார்ப்பட்டி ஆவின்பால் பண்னை முன்பாக போராட்டம் நடத்தினர்.

அரசு தங்களின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் நெல்லை ஆவின் பால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!