கைவிடப்பட்டதா சூப்பர் டூப்பர் ரீமேக் படம்.? காரணம் அந்த நடிகரா.?

Author: Rajesh
4 May 2022, 7:34 pm

நடிகர் சசிகுமார். இயக்குனராக அறிமுகமாகி பின் தானே இயக்கி அந்த படத்தில் நடிக்கவும் ஆரம்பித்தார். இவரின் எல்லா படங்களிலும் செண்டிமெண்ட் அதையும் தாண்டி நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

கமெர்ஷியலான படங்களிலே நடித்து வந்தவர் முதன் முதலில் ரஜினியுடன் ஒரு ஆக்‌ஷன் படமான பேட்ட படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்திருப்பார். இதன் பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் படமான ஐயப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை பாய்ஸ் பட புகழ் கதிரேசன் வாங்கியிருந்தார். இந்த படம் ஒரு போலிஸ்க்கும் கைதிக்கும் இடையே நடக்கும் மோதல் குறித்த படமாகும். இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகர் சசிகுமாரை கமிட் பண்ணியிருந்தார்.

ஆனால் இப்ப இருக்குற நிலைமைக்கு சசிகுமாரின் மார்க்கெட் சரிந்துள்ளதால் அவரை வைத்து படம் பண்ணுவது ரிஸ்க் என நினைத்து விட்டார். அதனால் தான் அந்த படத்தை இப்ப எடுக்க வேண்டாம் என ஓரங்கட்டி வைத்துள்ளார்களாம். அவர் பழைய நிலைமைக்கு வந்ததும் அந்த படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…