பிரியங்கா – மணிமேகலை விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்வி : வாய்க்கு வந்தபடி பேசிய CWC புகழ்!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2024, 6:28 pm

மதுரை விளாங்குடி பகுதியில் (ராயல் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின்) தனியார் பள்ளியில் 39வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை புகழ் மற்றும் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்

முன்னதாக பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கிய பிறகு சித்திரை திருவிழா -கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை தத்ரூபமாக நிகழ்த்தி பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் -சித்திரை திருவிழாவின் நாயகன் என்று சொல்லக்கூடிய கள்ளழகர் வைகை ஆற்றல் எழுந்தருளும் நிகழ்வு -அழகர் மலையில் காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாளிக்கும் 18-ஆம் படி கருப்பண சுவாமி என அனைத்து நிகழ்வுகளையும் தத்ரூபமாக செய்து பெற்றோர்கள் மட்டுமல்ல வந்திருந்த விருந்தினர்களையும் மகிழ்வித்தனர்.

அதனை தொடர்ந்து இருவரும் இணைந்து ஸ்டாண்ட் அப் காமெடி செய்தனர். அதன் பிறகு புகழ் மற்றும் தங்கதுரை இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புகழிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ?? குக் வித் கோமாளி நிகழ்வில் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

இது அவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சனையா இல்லை தொலைக்காட்சி நிறுவனத்துடன் பிரச்சனையா என்பது எனக்குத் தெரியவில்லை ??

உங்களைப் போன்று நானும் ஒரு ஆடியன்ஸாக தான் இதை பார்க்கிறேன். அது ஒரு பிரச்சனை என்று மைக்கை எடுத்துட்டு வந்து நீங்கள் கொண்டு வந்து கேட்பதை தவிர்க்க வேண்டும்

பொதுவெளியில் பொதுவாக சொல்லுகின்றேன், மைக்கை வைத்துக்கொண்டு பொதுவாக நாம் பேசிக் கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடிய வீடியோவை தவிர்க்க வேண்டும்.

நான் உங்களைச் சொல்லவில்லை (செய்தியாளரை பார்த்து) ஆயிரம் நபர்கள் மைக்கை கொண்டு வந்து வீடியோ போடுகிறார்கள் எது நடந்திருக்கும் என்பது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும் என்றார்.

அதனைத் தொடர்ந்து தங்கதுரை பேசுகையில் இந்த பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உண்மையில் இந்தப் பள்ளியில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கியது மகிழ்ச்சி.

மாநில அளவில் இன்னும் நிறைய விருதுகளை இங்கே படிக்கக்கூடிய மாணவர்கள் பயில வேண்டும். பல்துறை வித்தகர்களாக இசை நடனம் என இந்த மாணவர்கள் நிகழ்த்தி காட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது

உடற்பயிற்சி கூடம் கூட இங்கே இவர்கள் வைத்திருப்பதை பார்த்தபோது மகிழ்ச்சி அளிக்கிறது. கைபேசி இல்லாமல் இன்று யாருமே இல்லாத ஒரு நிலையில் மாணவர்களுடைய உடல் நலனில் அக்கறை கொண்டு உடற்பயிற்சி கொடுக்கக்கூடிய ஒரு பள்ளியாக திகழ்ந்து வருவதை பார்ப்பது மகிழ்ச்சி.

மாணவர்கள் மத்தியில் பேசுவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. பெரியவர்கள் கூட எளிதில் சிரித்து விடுவார்கள் சிறியவர்களை மகிழ்விப்பது உண்மையில் எளிதான காரியம் கிடையாது

இங்கே இந்த நிகழ்வில் அனைத்து மாணவர்களையும் சிரிக்க வைத்தது மகிழ்ச்சி. உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது ஆணழகன் போட்டியை நடத்துவது போன்று பள்ளியில் நடத்தியது மகிழ்ச்சி

மேடையில் மாணவர்கள் நிகழ்த்தி காட்டியது உண்மையில் மகிழ்ச்சி. முன்பெல்லாம் ஒரு சில தொலைக்காட்சிகள் தான் இருக்கும் வாய்ப்பு தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

மேலும் படிக்க: மும்பை நடிகையை பாடாய் படுத்திய முன்னாள் அரசு… பாதுகாப்பு கேட்டு அமைச்சரை சந்தித்து மனு!

ஆனால் தற்போது நிறைய சமூக வலைதளங்கள் வந்துவிட்ட நிலையில் இன்றைய இளைஞர்கள் மிக எளிதாக தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான தளம் இருந்து வருகிறது

விரைவில் ஹீரோவாக பார்க்கலாமா என்கின்ற கேள்விக்கு ?? நல்ல கதையும் தயாரிப்பாளரும் கிடைத்தால் நிச்சயம் நீங்கள் என்னை எதிர்பார்க்கலாம்.

Pugazh Anger About Manimegalai Priyanka issue

நிச்சயமாக மதுரையை கதைக்களமாக வைத்து ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன் மதுரையின் பகுதிகளுக்குள் நடக்கக்கூடிய ஒரு பகுதி. மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். தூங்காநகரம் எப்போது வந்தாலும் உணவு கிடைக்கும் சூடான இட்லி கிடைக்கும்.

மதுரை என்றாலே வேற லெவல் பாசமாக இருப்பார்கள்(என்று மதுரைக்கே உரிய பாணியில் பேசினார்) பாசக்கார மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி.
மதுரை என்பது எங்களது சொந்த ஊர் போன்று தான் அவ்வப்போது வந்து செல்வோம்

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!