பாத்ரூம் கூட போகக்கூடாது.. 8 நாட்கள் உணவின்றி தவித்த நீலகிரி பெண்கள்.. டிஜிட்டல் அரெஸ்ட்டின் உச்சக்கட்டம்!

Author: Hariharasudhan
11 December 2024, 6:53 pm

நீலகிரியில் டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கிய இளம்பெண் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இருந்து மொத்தமாக 30 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் மோசடியாகப் பெற்றுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.

அப்போது, சர்வதேச கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். மேலும், மும்பையிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பார்சல் ஒன்றில் போதைப் பொருட்கள் உள்ளதாகவும், அந்தப் பார்சலில் உங்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்றவையும் உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

IT Employee in Digital Arrest in Nilgiri

அது மட்டுமல்லமால், இது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனவே மும்பை சைபர் கிரைம் போலீசிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், ஸ்கைப் ஆப் மூலம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.

அப்போது, “உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து உள்ளோம். எனவே விசாரணை முடியும் வரை எங்கும் நகரக்கூடாது, அழைப்பையும் துண்டிக்கக் கூடாது. இதுகுறித்து வேறு யாரிடமும் தகவலைக் கசியவிட்டால் உங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும்” என்றும் அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் பட துல்கர் போல் வாழ ஆசை.. எகிறி குதித்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள்!

இதனால் அடுத்த 8 நாட்களுக்கு ஏதும் உண்ணாமலும், உறங்காமலும் இயற்கை உபாதைகளுக்கு கூடச் செல்ல முடியாமல் தனி அறையில் தவித்து வந்துள்ளார். மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எங்களுக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் அதை ஆய்வு செய்துவிட்டு உங்களுக்கு திரும்ப அனுப்புகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய அந்தப் பெண், தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த 16 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு அப்பெண் பணம் அனுப்பிய உடனே அந்த அழைப்பைத் துண்டித்து உள்ளனர். பின்னர், அந்தப் பெண் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Retired teacher locked in Digital Arrest in Nilgiris

நீலகிரியில் தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட்: இதனால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அப்பெண், இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், நீலகிரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியைக்கும் அழைப்பு வந்து உள்ளது.

அப்போத், டெல்லி போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்த அக்கும்பல், அவரிடம் 15 லட்சம் ரூபாயைப் பறித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்து உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

  • Anupama Parameswaran love statement காதல் குறித்து மனம் திறந்த அனுப்பமா பரமேஸ்வரன்…வெளிப்படையா இப்படி சொல்லிட்டாரே..!