பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு : கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
Author: kavin kumar29 January 2022, 10:51 pm
விருதுநகர் : அருப்புக்கோட்டை வட்டம் கணக்கி கிராமத்தில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரை பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்ததாக வருவாய்க் கேட்டாட்சியர் கல்யாணக்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது கணக்கி கிராமம்.இக்கிராமத்தில் கிராமநிர்வாக அலுவலராக ஜெயக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் பணிபுரிந்த கிராமத்தில் முறைகேடாக சிலருக்கு பயிர் அடங்கல் வழங்கியதாகவும், அதன்மூலம் அக்கிராமத்தினர் சிலர் முறைகேடாக பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றதாகவும் கூறப்படுகிறது. கிராமநிர்வாக அலுவலர் ஜெயக்குமார் முறைகேடு செய்தது வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டதால் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணக்குமார் உத்தரவிட்டுள்ளார்.