வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஏசி வெடித்து பால் வியாபாரி பரிதாப பலி : திருமணமான 6 மாதத்தில் நிகழ்ந்த சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 9:32 am

சென்னை : AC வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் திரு.வி.க நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம் (வயது 27) இவர் அப்பகுதியில் பாக்கெட் பால் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் , ஆடி மாதம் என்பதால் இருவரும் பிரிந்து தனலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஷயாம் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கை அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டதால் வீட்டின் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை பிரபாகரன் அலறி அடித்துக் கொண்டு கீழே வந்து பார்த்த போது வீட்டிற்குள் புகை மண்டலம் இருப்பதைக் கண்டு உள்புறமாக தாழ இட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பார்த்த போது AC வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பால் வியாபாரியான ஷியாம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்,

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திரு.வி.க நகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!