STUNT காட்சிகளை மிஞ்சிய விபத்து : கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் விழுந்து ஒருவர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 8:12 pm

பரமக்குடி அருகே வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து தொண்டிக்கு நண்பரின் திருமணத்திற்காக  மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், ஜெயக்குமார் ஆகிய மூவர் ஒரு சிகப்புக் கலர் டவேரா காரில் வந்து கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் பரமக்குடி  நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கியது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேந்தோணி ஜங்ஷன் அருகே நான்கு வழிச் சாலையின் நடுவில் அதி வேகத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு பகுதியில் வேகம் குறையாமல் கடக்க முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சிமெண்ட் தடுப்பை தாண்டி காருடன் கால்வாய்க்குள் விழுந்தனர்.

இதில் பாலமுருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் மற்ற இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?