சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மினி டெம்போ மோதி விபத்து.. தூக்கி வீசப்பட்ட ஷாக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 1:42 pm

சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மினி டெம்போ மோதி விபத்து.. தூக்கி வீசப்பட்ட ஷாக் VIDEO!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள இராமகிருஷ்ணம்பதி கிராமத்தை சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் மோகன் மற்றும் அவரது மனைவி செண்பகம் இருவரும் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 11 ம் தேதியன்று வீட்டிற்க்கு தேவையான மளிகை பொருட்களை மத்தூரில் இருந்து வாங்கிக்கொண்டு சாலையின் ஓரமாக நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது பின்னால் வேகமாக வந்த மினி டெம்போ ஒன்று முதியவர் மோகன் மீது பலமாக மோதியது. இதில் முதியவர் மோகன் தூக்கி வீசப்பட்டு அங்கேயே மயங்கி கிழே விழுந்தார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய மினி டெம்போ நிற்காமல் சென்ற நிலையில் இதுகுறித்து மத்தூர் காவல் நிலையத்தில் மோகனின் மகன் பாலச்சந்திரன் கொடுக்க புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்தூர் போலீசார் மறைத்து வைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை சிசிடிவி கேமரா ஆதாரங்களைக் கொண்டு மீட்டு காவல் நிலையம் எடுத்து வந்தனர்.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டெம்போ ஒட்டினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை மத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நடந்து சென்ற முதியவரின் மீது மினி டெம்போ மோதி தூக்கி வீசப்பட்ட காட்சியானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அந்த வீடியோவனது தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 341

    0

    0