வருமானத்தை விட 171% சொத்து குவிப்பு : வசமாக சிக்கிய சிறந்த காவல் அதிகாரி விருது பெற்ற பெண் காவல் ஆய்வாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 8:20 pm

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் 20 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.1 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்து. 91 பவுன் நகை, பணம் சிக்கியது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கண்மணி. இவர் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2017ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தன. நாகர்கோவில் கீழ ராமன்புதூர் பகுதியில் இவரது வீடு உள்ளது. இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார்.

இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஆய்வாளர் கண்மணி வீட்டில் நடந்த சோதனையில் 7 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கப்பணம், 91 சவரன் நகை, சிக்கியது . நிரந்தர வைப்பு தொடர்பான பத்திரம் மற்றும் நில பத்திரங்களை அரசியல் பிரதிநிதிகள் என ஒரு போலியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது அவர்களின் வருவாயை 171 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. இதேபோல் ஆய்வாளர் கண்மணியின் தோழியான அழகு நிலையம் வைத்திருக்கும் அமுதா என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் ரூ.23 லட்சத்திற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய தமிழகத்தின் சிறந்த காவல் ஆய்வாளர்களில் ஒருவராக கண்மணி தேர்வு செய்யப்பட்ட அவருக்கு விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1507

    0

    0