யூடியூபில் அவதூறு குற்றச்சாட்டு… கிறிஸ்துவ மத போதகர் அதிரடி கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 3:16 pm

யூடியூபில் அவதூறு குற்றச்சாட்டு… கிறிஸ்துவ மத போதகர் அதிரடி கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பகுதியில் இயேசு விடுவிக்கிறார் என்ற கிறிஸ்தவ மத போதனை ஊழிய ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்தாபனத்தில் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் என்பவர் அப்பகுதியில் கிறிஸ்தவ மத போதனையுடன் அப்பகுதி மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து சமூக சேவையும் செய்து வருகிறார்

சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் ஆக்டிங் கிறிஸ்டியன் 3.0 என்ற youtube சேனல் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஊழிய ஸ்தாபனங்கள் மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை அவர்கள் குடும்பத்தார் மீதும் வீண்பழி சுமத்தி விளம்பரம் தேடி வந்தார்.

இதனை அறிந்த ஏரல் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ பக்தர் சாந்தகுமார் என்பவர் மேற்படி சார்லஸ் மீது புகார் மனு குரும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்ததின் பேரில் குரும்பூர் காவல் நிலைய காவல்துறையினர் யூடியூப்பில் அவதூறு பரப்பி வந்த சார்லசை கைது செய்து இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் என் நான்கின் நீதிபதி குபேரசுந்தர் முன்பு நேர் நிறுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர், சார்லஸை வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேரூரணி

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 607

    0

    0