நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய கொலை வழக்கு குற்றவாளி
நீதி மன்றத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய குற்றவாளியை துரத்தி பிடித்த போலீசார்
வேலூர் அருகதம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (23)
கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து இன்று விசாரணைக்காக சத்துவாச்சாரி பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு போலீசார் மதிய உணவு கொடுத்தனர்.
அதை சாப்பிட்டுவிட்டு கை கழுவுகிறேன் என்று தண்ணீர் பாட்டிலுடன் தப்பி ஓடி உள்ளார். நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடியுள்ளார். அப்போது போலீசார் துரத்திச் சென்றனர்.
போலீசார் நெருங்கிய உடன் நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவருக்கு கால் உடைந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர். இச்சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
This website uses cookies.