பெண் மீது ஆசிட் வீச்சு : கோவை நீதிமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் பயங்கரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 11:46 am

கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசயமாக வந்த பெண் மீது மர்ம நபர் ஆசிட் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை ஜே எம் 2 நீதிமன்றத்தின் முன் பெண் ஒருவர் மீது மர்மநபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இப்பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தின் முன்பு உள்ள முக்கிய சாலையில் வழக்கறிஞர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆசிட் வீசியவர் பெண்ணின் கணவர் என்றும் குடும்பத் தகராறால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ