Constronics Infra Limited நிறுவனத்திற்கு கிடைத்த அங்கீகாரம் : பறக்கும் பாலம் திட்டத்தை கைப்பற்றியது!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 7:45 pm

பொது நிறுவனமான Constronics Infra Limited தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் சுமார் ரூ.5.54 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள பல்வேறு டெண்டர்களை வெற்றிகரமாக செய்து முடித்து உள்கட்டமைப்பு சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கான்ஸ்டிரானிக்ஸ் இன்ப்ரா லிமிடேட் நிறுவனத்துக்கு பறக்கும் பாலம் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது.

உள்கட்டமைப்பு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் தொடர்பான சில்லறை வணிகப் பிரிவில் கவனம் செலுத்தும் முன்னணி நிறுவனமான கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், கோயம்புத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் பாலம் கட்டுவது தொடர்பான திட்டத்திற்கான ஆர்டரின்படி பணியைத் தொடங்க உள்ளது.

ரூ. 42 கோடி மதிப்பில் 22 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் பெரிய பாலம் திட்டப் பணி இதுவாகும்.

நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் நிபுணர்களின் மதிப்பாய்வு மற்றும் கருத்துப்படி, சந்தை நிறுவனத்திற்கு நல்ல மதிப்பை அளிக்கிறது.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?