மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு : நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 வருட சிறை தண்டனை!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2024, 6:52 pm
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு : நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 வருட சிறை தண்டனை!
திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான சுரபி நர்சிங் கல்லூரியில் தாளாளர் ஜோதி முருகன் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 19.11.21 அன்று தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோதி முருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இது தொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கு விசாரித்த நீதிபதி கருணாநிதி இன்று ஜோதி முருகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 25000 அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்