எஞ்சின் ஆயில் வாங்கிவிட்டு GPAYல் பணம் செலுத்துவது போல ஆக்டிங் : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 1:13 pm

எஞ்சின் ஆயில் வாங்கிவிட்டு GPAYல் பணம் செலுத்துவது போல ஆக்டிங் : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்!!

கோவையில் இரு சக்கர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பொருள் வாங்க வருவது போல் வந்து வாங்கிய பொருளுக்கு “Gpay” செய்யாமல் பொருளை எடுத்துக் கொண்டு ஓடியவர் தொடர்பான சி.சி.டி.வி.காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் பிரவீண் என்பவர் நடத்தி வரும் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு ஹெல்மெட் அணிந்து ஒரு நபர் வந்துள்ளார்.

https://vimeo.com/872248432?share=copy

இரு சக்கர வாகனத்திற்கான Engine Oil கேட்டுள்ளார். சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான oil”ஐ பெற்றுக் கொண்ட அந்த நபர் “Gpay” செய்வது போல சென்று விட்டு பின்னர் அங்கிருந்து பொருளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடி விட்டார்.

https://vimeo.com/872248486?share=copy

கடைக்கு வெளியே மற்றொரு வாகனத்தில் காத்திருந்த ஒருவருடன் சேர்ந்து அந்த நபர் தப்பி விட்டார்.இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.டீ கடைகள் முதல் shopping mall கள் வரை “UPI” பரிவர்த்தணை வாடிக்கையாகி விட்ட நிலையில் அவற்றை பயன்படுத்தி மோசடிகளும் அதிகமாகி வருவது விழிப்புடன் இருப்பது அவசியமாகி உள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…