100 ரூபாய்க்கு அதிரடி ஆஃபர் : அறிவிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த 200 கிலோ பிரியாணி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 5:10 pm

கடை திறப்பு விழாவை முன்னிட்டு சலுகை விலையில் பிரியாணி ஏராளமான கூடியதால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

திருப்பூர் – மங்கலம் சாலை, பழக் குடோன் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. கடை திறப்பு விழா சலுகையாக 100 ரூபாய்க்கு 1 கிலோ சிக்கன் பிரியாணி, 100 கிராம் சில்லி, 2 அவித்த முட்டை என அறிவிக்கப்பட்டது.

இதனால் கடை திறந்த உடன் ஏராளமானோர் குவிய துவங்கினர். முக்கிய சாலையில் கடை அமைந்திருந்ததால் கடைக்கு வந்த கூட்டம் சாலையிலும் நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக தகவலறிந்து விரைந்து சென்ற மத்திய காவல் நிலைய போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி சாலையோரம் வரிசையாக நிற்க வைத்தனர். போதிய ஏற்பாடுகள் செய்த பின்னர் சலுகை அறிவிக்க வேண்டும் என கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.

முதல் நாளில் 200 கிலோ பிரியாணி செய்த நிலையில் ஏராளமானோர் கூடியதால் 1 மணி நேரத்தில் மொத்தமும் விற்பனையானது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!