அமைச்சர் நேருவின் முக்கிய ஆதரவாளர் மீது நடவடிக்கை : திமுக எம்பி வீடு மீது தாக்குதல்…அதிரடி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 6:23 pm

திருச்சி காவல்நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திமுக வட்டச்செயலாளர் மூவேந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில் எம்.பி.ஆதரவாளர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சிவா ஆதரவாளர் சூரியகுமார் கொடுத்த புகாரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமைச்சர் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.

திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம் , துரைராஜ், ராமதாஸ் ஆகியயோர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் காஜாமலை விஜய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 4 பேரும் சரணடைந்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி