அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு : முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2024, 1:58 pm

ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து, அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சமையலறை மற்றும் உணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழைகள் பயன்பெறும் வகையில் தரமான உணவு தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 243

    0

    0