நண்பனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த நடிகர் அஜித்.. வெற்றி துரைசாமி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்.. வைரலாகும் வீடியோ!
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவரும் சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றி துரைசாமி காரில் விமான நிலையம் புறப்பட்டார்.
இந்த நிலையில் கார், கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் தஞ்ஜின் உயிரிழந்தார். மேலும் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியை காணவில்லை. அவரை தேடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
இன்று அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் முடித்த பிறகு கண்ணம்மாபேட்டை மயானத்தல் உடல் தகனம் செய்ய உள்ள மனித நேய அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பரும், நடிகருமான அஜித் தற்போத வெற்றியின் வீட்டிற்கு ஆறுதல் கூற வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெற்றிக்கு சுற்றுலா செல்வது, சாகசங்கள் செய்வது மிகவும் பிடிக்கும். அஜித்துக்கும் இவருக்கு ஒரே டேஸ்ட் என்பதால், இருவரும் நண்பர்களாக நெருக்கமானார்கள்.
அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி வெளியிட்டிருந்தார். அஜித், வெற்றியின் திருமணத்திற்குக் கூட மனைவி ஷாலினியுடன் சென்று வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.