தமிழகம் முழுவதும் ஓட்டல்களை திறக்கும் நடிகர் அஜித்..? ரசிகர்களுக்கு கிடைத்த இனிப்பான செய்தி..!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 2:58 pm

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டது. கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு திரையரங்குகளை திறந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு வலிமை படம் நல்ல வசூலை ஈட்டிக் கொடுத்தது. இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

தற்போது, எச். வினோத் இயக்கத்தில், மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் ஏ.கே.61 படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் வில்லனாக பிரபலமடைந்த ஜான் கொகேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஐதராபாத்தில் சுமார் 9 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும், இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் ஏ.கே. 62 படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஏ.கே.62 படத்தின் கதை குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் நடத்துபவராக நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சாதாரண மனிதராக இருந்து கடின உழைப்பால் முன்னேறும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Ajith Next Flip - Updatenews360

மேலும், இதுவரையில் வயதான தோற்றங்களிலும், 40 அல்லது 50 வயதுடைய ஹீரோவாகவே நடித்து வரும் அஜித், இந்தப்படத்தில் இளமை தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்காக உடல் எடையை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1195

    3

    2