இது எங்களின் துக்கமான தருணம்.. தந்தையின் மறைவால் உடைந்து போன குடும்பம் ; ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த AK..!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 11:22 am

தனது தந்தை இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த அஜித்தின் தந்தை, திடீரென இன்று காலை காலமானார்.

இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இறுதிச்சடங்குகளுக்கு பிறகு, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தந்தை சுப்ரமணியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இதனிடையே, நடிகர் அஜித்குமார் தரப்பில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எங்களது தந்தையார்‌ பி.எஸ்‌.மணி (84 வயது) அவர்கள்‌ பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில்‌ இருந்து வந்தார்‌. இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில்‌ உயிர்‌ நீத்தார்‌. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால்‌ பாதிக்கப்பட்டிருந்த எங்கள்‌ தந்தையை அன்போடும்‌, அக்கரையோடும்‌ கவனித்து வந்தும்‌, எங்கள்‌ குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும்‌ நாங்கள்‌ கடமைப்பட்டுள்ளோம்‌.

Ajith Vishnuvardhan - Updatenews360

எங்கள்‌ தந்தையார்‌ சுமார்‌ அறுபது ஆண்டு காலமாக எங்கள்‌ தாயின்‌அன்போடும்‌, அற்பணிப்போடும்‌ ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்‌. இந்த துயர நேரத்தில்‌, பலர்‌ எங்கள்‌ தந்தையாரின்‌ இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும்‌, எங்கள்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ சொல்வதற்காகவும்‌ எங்களை தொலைபபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல்‌ அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்‌.

தற்போதுள்ள சூழலில்‌ எங்களால்‌ உங்கள்‌ அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில்‌ தகவல்‌ அனுப்ப இயலாதமையை நீங்கள்‌ புரிந்துகொள்வீர்கள்‌ என நம்புகிறோம்‌. எங்கள்‌ தந்தையாரின்‌ இறுதி சடங்குகள்‌ ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்‌. எனவே, இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும்‌ எங்களுடைய துயரத்தையும்‌, இழப்பையும்‌ புரிந்துகொண்டு, குடும்பத்தினர்‌ துக்கத்தை அனுசரிக்கவும்‌, இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில்‌ செய்யவும்‌ ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்‌, எனக் கேட்டுக் கொண்டார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 399

    0

    0