தெறிக்க விடும் வசனங்களுடன் “Gangstaa”… துணிவு படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு ; 25ம் தேதி காத்திருக்கு தரமான சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 6:56 pm

அஜித்தின் அடுத்த படமான ‘துணிவு’ 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் மோதுவதால், இரண்டு படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், இந்தப் பொங்கல் பண்டிகை போட்டியான பண்டிகையாகும்.

வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் திரைப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் 66-வது படமான வாரிசு படம், 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அந்தப் படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என அது பற்றிய தகவல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. ‘துணிவு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் ‘வாரிசு’ படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.

இதனிடையே, ‘வாரிசு’ தீ தளபதி பாடலை தொடர்ந்து, துணிவு படத்தின் ‘Chilla Chilla’ பாடல் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், துணிவு படத்தின் அடுத்த அப்டேட் என்ன..? எப்போது வெளியாகும் என்று AK ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், துணிவு படத்தின் “Gangstaa” பாடலின் Lyrics-ஐ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், தெறிக்க விடும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், டிரெண்ட் செய்யவும் தொடங்கி விட்டனர்.

அதோடு, 25ம் தேதி “Gangstaa” பாடல் வெளியாகும் என்று செய்தியையும் படக்குழுவினர் வெளியிட்டிருப்பதால், அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 585

    2

    0