திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இப்போது காவல்நிலையம், நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், திவ்யாவை தொடர்ந்து மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் அர்ணவ் குறித்து திடுக்கிடும் பல தகவல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில், திவ்யாவை தொடர்ந்து மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் அர்ணவ் குறித்து திடுக்கிடும் பல தகவல்களை கொடுத்துள்ளார்.
சீரியல் நடிகர் அர்ணவ், நடிகை திவ்யா இருவரது காதல் விவகாரமும் கடந்த ஒருவாரமாக ட்ரெண்டிங்கில் உள்ளது. மகராசி சீரியலில் அறிமுகமான திவ்யா, தற்போது செவ்வந்தி நாடகத்திலும் நடித்து வருகிறார்.
அவரும் விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்துவரும் அர்ணவும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு ஒரேவீட்டில் ஒன்றாக வாழ்ந்துவந்த இருவரும், சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா சில தினங்களுக்கு முன்பு அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியிருந்தார். மேலும் தனது கரு கலைந்துவிட வாய்ப்பு இருப்பதாகக் கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது அர்ணவ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து திவ்யா வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகின. உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த அர்ணவ் நடிகை திவ்யா மீது புகார் அளித்தார்.
இந்நிலையில், திவ்யாவின் புகாரின்பேரில் சென்னை போரூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அர்ணவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், படப்பிடிப்பில் இருந்த அர்ணவை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அர்ணவ்வை வரும் 28ம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதியும் உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்ணவ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அர்ணவ் மீது மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் சரமாரியாக புகார் அளித்துள்ளார். திவ்யாவின் வழக்கறிஞரை செல்போனில் தொடர்புகொண்ட அந்த திருநங்கை, அர்ணவ் தன்னை ஏமாற்றியதாகக் கூறியுள்ளார்.
அர்ணவ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், அப்போது மாலில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அர்ணவிற்கு அப்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கும் அர்ணவுக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் அவர் பேசிய ஆடியோ இப்போது வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.