அந்த யோக்கியதை இல்லை.. மரணத்திற்கு முன் உருக்கமாக பேசிய பிஜிலி ரமேஷ்..!

Author: Vignesh
27 August 2024, 10:19 am

Youtube பிராங்க் வீடியோவின் மூலமாக பிரபலமான பிஜிலி ரமேஷ் நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். குடிப்பழக்கத்தினால் தனது உடல்நிலை மோசமடைந்ததாகவும், பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும், சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக நேற்று இரவு பிஜிலி ரமேஷ் உயிரிழந்தார். அவரது மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் திரை துறையில் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, மரணத்திற்கு முன்பாக பிஜிலி ரமேஷ் பேசிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பேசிய பிஜிலி ரமேஷ் எனது உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. வண்டி ஓடும் வரை ஓடும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்த குதிரை எப்போது நிற்கும் என தெரியாது. ஓடினால் ஓடினதுதான், நின்றால் நின்றது தான்.

இனிமேல் அதைப்பற்றி பேசி எந்த பிரயோஜனமும் கிடையாது. இருக்கும் வரை எனது மனைவியையும் குழந்தைகளும் சந்தோஷமாக இருந்தால் சரி தான். காலையில் கூட கொஞ்சமாகத்தான் சாப்பிட முடிந்தது. குடிக்கிறவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை கிடையாது. அந்த தகுதியை நான் இழந்து விட்டேன் என அந்த வீடியோவில் அவர் உருக்கமாக பேசியிருந்தார். தற்போது, இவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…