நடிகர் பாபி சிம்ஹாவுக்கு கொலை மிரட்டல்…. போலீசார் வீசிய வலை : முடிவில் காத்திருந்த ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2023, 3:08 pm

நடிகர் பாபி சிம்ஹாவுக்கு கொலை மிரட்டல்…. கூலியாட்களுடன் சிக்கிய முக்கியப்புள்ளி!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது.இவர் கொடைக்கானலை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஜமீர்,காசிம்முகமது ஆகியோரை வைத்து கட்டிடம் கட்டிவந்துள்ளார்.

இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்குமிடையே ஒரு சில காரணங்களால் மன கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணி தாமதமாக நடைபெற்று வந்துள்ளது. இதன் காரணமாக பாபி சிம்ஹா அவர்களிடம் கட்டிடத்தை விரைந்து முடித்துத்தர கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் இருவரும் நடிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் சொற்களை பேசியதாகவும், இவர்களுடன் சேர்ந்து கொடைக்கானலை சேர்ந்த உசேன், பேத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோரும் மிரட்டியதாகவும் நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முறையான அனுமதி பெற்று தான் கட்டிடம் கட்டி வருவதாகவும், தன்னை பேத்துப்பாறை மகேந்திரன் என்பவர் கலங்கப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மகேந்திரன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் மீண்டும் இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபடும் இவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் பாபி சிம்ஹா கூறியுள்ளார்

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!