நடிகர் ஜீவா சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. அலறிய மனைவி.. தேசிய நெடுஞ்சாலையில் பரபர.!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 5:58 pm

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான சொகுசு காரில் சென்றனர்.

அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமைகரம் கிராமத்தின் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நபர் ஒருவர் வந்ததாகவும் அவர் மீது மோதாமல் இருக்க நடிகர் ஜீவா காரை திருப்பியபோது சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி சொகுசு காரானது தலைக்குப்பிறக் கவிழிந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிர்த்தபியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் காரை மீட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!