பிறந்தநாளன்று பழனி கோவிலுக்கு வந்த நடிகர் கார்த்தி : தந்தை சிவக்குமாருடன் முருகனை வழிபட்டு ரசிகர்களுடன் செல்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 1:28 pm

பழனி மலைக்கோயிலில் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரபல திரைப்பட நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன் நடிகர் கார்த்திக் ஆகியோர் இன்று பழனி மலைக்கோவில் சாமி தரிசனம் செய்தனர்.

நடிகர் சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் மின் இழுவை ரயில் மூலம் மலைக்கு சென்றார். அவரது மகனும் நடிகருமான கார்த்திக் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றார்.

காலையில் விஸ்வரூப அலங்காரத்தில் இருந்த முருகனை சாமி தரிசனம் செய்தனர். அப்போது மலைக்கோவிலில் இருந்த பக்தர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!