‘நாட்டுக்கு மட்டுமல்ல இது தந்தைக்கும் பெருமை தான்’ ; 5 தங்கப்பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்.. குவியும் பாராட்டு!!

Author: Babu Lakshmanan
17 April 2023, 2:06 pm

மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக 5 தங்க பதக்கங்களை நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வென்றுள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறந்த நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில், சிறப்பாக செயல்பட்ட வேதாந்த், 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

மகன் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றதால், மகிழ்ச்சியில் தத்தளிக்கும் நடிகர் மாதவன், இது தொடர்பாக ஆனந்தத்துடன் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார். அதில், கடவுளின் கருணையாலும் மற்றும் உங்களுடைய நல்வாழ்த்துகளாலும், மலேசியாவில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற வேதாந்த், இந்தியாவுக்காக 5 தங்க பதக்கங்களை வென்றெடுத்து உள்ளார். மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 3 தங்க பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!