நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி… பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவம்!!

Author: Babu Lakshmanan
17 April 2024, 3:01 pm

நடிகரும், வேட்பாளரமான மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் இந்திய புலிகள் ஜனநாயக கட்சி தலைவர் மன்சூர் அலிகான், திடீர் உடல்நல குறைவு காரணமாக, குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

இன்று காலை முதல் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்பரை மேற்கொண்டு விட்டு குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தற்போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பான சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 583

    0

    0