கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் வீரபத்திரன் பாணியில் வேலூர் தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை என்றும், மத்தவங்க எல்லாம் தோப்புல எனக்கூறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திறந்தவேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: அதிமுக – பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம்… சேர்ந்து இருக்கும் போதே ஒன்னும் முடியல ; திருமாவளவன் விமர்சனம்!!
அப்பொழுது பேசிய அவர் கூறியதாவது :- நான் தான் மாப்பிள்ளை. நான் தான் உங்கள் தொகுதிக்கு வேலைக்காரன், உங்கள் அன்பின் அடிமை என்னை தேர்ந்தெடுங்கள். இந்த நாய்க்கு ஒட்டு போட்டால் நன்றாக குறைப்பேன். இந்த கழுதைக்கு ஒட்டு போட்டால் சாப்பிடுவேன். இந்த மாட்டிற்கு ஒட்டு போட்டால் நன்றாக பால் கொடுப்பேன்.
கதிர் ஆனந்த நல்ல மனிதர். அமெரிக்காவில் போய் படித்து விட்டு வந்தார். அவர் நன்றாக இருக்கட்டும். அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து இங்கு ஓட்டு கேட்கிறார். 5 வருடம் எம்பியாக இருந்தார். அப்போது ஒன்றும் புடுங்க வில்லை அல்லவா..? அப்பா சொத்தை சாப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இங்கே பார் நான் தான் வருவேன்.
மேலும் படிக்க: மன்னிப்பு கேட்டா மட்டும் போதுமா… நாங்க ஏன் ஆக்ஷன் எடுக்கக்கூடாது ; பாபா ராம்தேவ்க்கு நீதிமன்றம் குட்டு!
மேலும், உங்களுக்கு வேலைக்காரனாக வருவேன். என் சட்டையை பிடித்து நீங்கள் கேள்வி கேட்கலாம். நான் வெளியே சுற்றுபவன், நான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். சினிமா நடித்து எனக்கு வெறுத்துப் போய்விட்டது, எனக் கூறினார்.
அப்போது, ஏய் வீரபத்ரா இத்தனை வருடம் சினிமாவில் நடித்துவிட்டு, இப்பொழுது வேலூரில் வந்து தேர்தலில் நிற்கிறாயே என கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் பாணியில் அருகில் இருந்தவர் கேள்வி கேட்டார். உடனே தனது பாணியில் வீரபத்திரன் படத்தில் சிரித்தது போல் சிரித்து, ஒரு மாடு ரெண்டு பீஸ் ஆச்சு, அந்த பக்கம் திமுகவும், இந்தப் பக்கம் அதிமுகவும் நடுவுல ரெண்டு கால வச்சுகிட்டு ஒன்னு வருது. அது பாஜக. எத்தனை பீஸ்ஸாக போறானுங்கன்னு எனக்கு தெரியல.
ஏன்னா இந்த தொகுதியில் நான்தான் மாப்பிள்ளை. மத்தவங்க எல்லாம் தோப்புல. நான் வருவேன், மோடி வாயில் வடை சுடுகிறார், என வீரபத்திரன் பாணியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.