சரக்கை நம்பி ரூ.4 கோடி போச்சு… அமைச்சர் உதயநிதி தான் முழுக்க முழுக்க காரணம் ; மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 10:02 pm

நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் பொதுக்கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது. இதில் அவர் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

நடிகர் மன்சூர் அலிகான் தனது கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். கடந்த கால தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். தற்போது அந்த கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தினத்தன்று வெளியிட்டிருந்தார்.

இது பற்றி பேசியிருந்த நடிகர் மன்சூர் அலிகான், “தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய இந்த அமைப்பை, தற்போது தேசிய அளவில் எடுத்துச் செல்வதற்காக இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் என்று மாற்றியிருக்கிறேன். இதனை குடியரசு தின நாளில் தொடங்கி இருக்கிறேன்.

எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும், பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதும் தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம். இதற்காக இந்தியா முழுவதும் நாங்கள் பொறுப்பாளர்களை நியக்க உள்ளோம். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என பேசி இருந்தார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடிகர் மன்சூர் அலிகானால் துவங்கப்பட்டுள்ள இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தமிழர் திரள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்களும் அவருடைய ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவன தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் சிறப்புரை ஆற்றி பேசுகையில், அரசியல் மாற்றம் அடிப்படை மாற்றம் மற்றும் தமிழர்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் நீண்ட உரையாற்றினார்.

அப்போது, தொடர்ந்து இந்தியாவிலும், தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கோடி கோடியாக கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள், இன்னும் தமிழக மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்.

மேலும், வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படும் ‘EVM மிஷினை உடைத் தெறிய வேண்டும்’, ‘மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்’. சரக்கு படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் உதயநிதி தான் என்றும், திரையரங்குகள் கொடுக்காமல் எல்லாவற்றையும் ஆளுங்கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஓடிடி யிலும் வெளியிட முடியாதபடி செய்து எனக்கு நஷ்டத்தை உண்டு பண்ணி உள்ளனர் எனக் குற்றம்சாட்டினார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 245

    0

    0