காவல்நிலையம் முன்பு நடிகர் மன்சூர் அலிகான் திடீர் தர்ணா : போலீசார் சமரச பேச்சுவார்த்தையால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 11:29 am

காவல்நிலையம் முன்பு நடிகர் மன்சூர் அலிகான் திடீர் தர்ணா : போலீசார் சமரச பேச்சுவார்த்தையால் பரபரப்பு!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவரது ஆதரவாளரான சத்துவாச்சாரியை சேர்ந்த ரசாக் என்பவரை வினோத் என்ற நபர் தாக்கியுள்ளார். இதுகுறித்து ரசாக் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை இதனை கண்டித்து இன்று நடிகர் மன்சூர் அலிகான் தனது ஆதரவாளரான ரசாக்கை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது பின்னர் காவல்துறையினர் வினோத்தை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மன்சூர் அலிகான் அங்கிருந்து சென்றார்

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 458

    0

    0