திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரஜினிகாந்த் மகள் குடும்பம் : கரும்பு கொடுத்து கோவில் யானையிடம் ஆசி வாங்கி மகிழ்ச்சி!!

Author: Babu Lakshmanan
2 February 2023, 2:31 pm

தூத்துக்குடி : நடிகர் ரஜினிகாந்த் மகள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அவரது கணவர் அஸ்வின் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்திருந்தார்.

கோவிலில் மூலவர், சண்முகர், சத்ருசம்ஹாரமூர்த்தி, பெருமாள் ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்து ஆசி பெற்றனர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ