‘அலப்பறை கிளப்புறோம் பாருடா’… திடீரென குவிந்த ரசிகர்கள் ; செல்பிக்கு போஸ் கொடுத்த ரஜினிகாந்த்..!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 9:14 pm

நெல்லையில் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வழியில் ரசிகர்களுக்கு செல்பி போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது திரைப்பட சூட்டிங் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னியாகுமரியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அவர் செல்லும் வழியெங்கும் ரசிகர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

https://player.vimeo.com/video/873761713?badge=0&autopause=0&quality_selector=1&progress_bar=1&player_id=0&app_id=58479

நடிகர் ரஜினிகாந்த் மூன்றாவது நாளாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள கிளம்பினார். அப்போது, அங்கு திரண்ட ரசிகர்களுக்கு செல்பி எடுக்க சிறிது நேரம் காரை நிறுத்தி காரில் இருந்தபடி, அவர்களுக்கு போஸ் கொடுத்தார். இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ