எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருந்த நட்பு மிகவும் புனிதமானது ; அஞ்சலி செலுத்திய பிறகு கண்கலங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!!!
Author: Babu Lakshmanan9 April 2024, 8:06 pm
மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் உடல் சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது :- ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து நம் எல்லாரையும் பிரிஞ்சிருக்கார் உத்தமர் ஆர்.எம்.வீரப்பன் சார் அவர்கள். அமரர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை என அனைத்திலும் அவரது வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வி சார்.
அவரால் உருவாக்கப்பட்ட அவருடைய பல சிஷ்யர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும் புகழும் பணத்துடனும் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க: என் தந்தைக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல… பிரச்சாரத்தின் போது வீரப்பனின் மகள் உருக்கம்…!!!
ஆர்.எம்,வீரப்பன் எப்பவும் பணத்துக்கு பின் போனவர் அல்ல. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அண்ணா சொன்னது போல் அதனை கடைபிடிச்சு வாழ்ந்தவர். எனக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருந்த நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. இப்போது அவர் நம் கூட இல்லை என்பதால் இதை சொல்லவில்லை. என் வாழ்நாளில் நான் அவரை மறக்கவே முடியாது. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், எனக் கூறினார்.