‘தலைவா.. தலைவா..’ படப்பிடிப்புக்கு வந்த ரஜினிகாந்த்… மொத்த ஊரும் திரண்டு நின்ற சம்பவம் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
10 October 2023, 10:00 pm

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் நடந்த தலைவர் 170 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு சென்றார்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா ,துசாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.

பணகுடியில் ஆர்.எம்.எஸ் ஓடு தொழிற்சாலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை பங்கேற்றார். மொத்தம் 3 நாட்கள் பணகுடி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் நிலையில், இன்று மாலை படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு சென்றார். அவரை மொத்த ஊர்மக்களும் திரண்டு நின்று வரவேற்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் நாளை படபிடிப்பில் பங்கேற்கிறார். படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி, ஓடு தொழிற்சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 428

    0

    0