கோவை வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு… கார் மீது ஏறியவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் ஆரவாரம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2023, 1:29 pm
கோவை வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு… கார் மீது ஏறியவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் ஆராவாரம்!!
நடிகர் ரஜினிகாந்த் சூலூரில் நடைபெற உள்ள தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி லதாவுடன் கோவை வந்தார். நடிகர் ரஜினி காந்த் வருவதை முன்னரே அவரது ரசிகர்கள் விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர்.
இந்நிலையில்,சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சரியாக 11.30 மணிக்கு வெளியே வந்த அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினி காந்த் பதிலளிக்க தயாரான நிலையில்,கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை.. ஓரிரு வார்த்தைகளாக தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக கூறினார்.தொடர்ந்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து விடை பெற்றார்.