அரசியல் பயணத்தில் விஜய்யுடன் கைகோர்க்க முடிவு… த.வெ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சமுத்திரக்கனி திட்டம்..!!
Author: Babu Lakshmanan16 February 2024, 2:52 pm
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் என இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி வந்திருந்தார்.
பிரகாரம் முழுவதையும் சுற்றிப் பார்த்து அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அங்குள்ள புத்தக கடையில் புத்தகத்தை தேடிப் பார்த்து வாங்கினார். பின்பு அவருடன் அங்கிருந்த பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ச்சியாக சினிமா துறையினர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.மக்கள் பணிக்காக தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்திலும் கூட நிற்பேன்,” எனக் கூறினார்.