செய்தியை கேட்டு படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி கோவைக்கு விரைந்த நடிகர் சத்யராஜ்… முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 9:38 pm

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நாதாம்பாள் காளிங்கராயர் இன்று (அக்டோபர் 11) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ், தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தியறிந்து கோவை விரைந்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் வயது மூப்பின் காரணமாக சத்யராஜ் அவர்களின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் அவர்கள் இயற்க்கை எய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன்,

அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழந்த தவிக்கும் திரு. சத்யராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 452

    0

    0