நடிகர் சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்புகள்.. பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 6:44 pm

நடிகர் சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்புகள்.. பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி வீடியோ!!

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தன்னுடைய இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் ஏ பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. இன்று இந்த படம் உலகெங்கும் வெளியான நிலையில் பாசிட்டிவ்வான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் புரோமஷனுக்காக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என நடிகர் சித்தார்த் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் பெங்களூருவில் சித்தா பட பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நிகழ்விடத்திற்கு வந்த நடிகர் சித்தார்த் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கு வந்த கன்னட அமைப்பினர் நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கொண்டு அவருக்கு எதிரக முழக்கமிட்டனர். தமிழகம் – கர்நாடகம் இடையே காவிரி நதி நீர் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் உள்ள பல நடிகர்கள் கர்நாடகாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் படமான சித்தா திரைப்படத்திற்காக கர்நாடகாவில் புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு மேடையில் இருந்து வெளியேறினார் நடிகர் சித்தார்த். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ