சினிமாவை விட்டு போறேன்.. ட்டுவிட்டர் சூரப்புலி சித்தார்த்.. ஓ.. இதுதான் காரணமா.?

Author: Rajesh
17 May 2022, 11:59 am

பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் மொழி குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?