மீண்டும் நடிகர் தனுஷை சீண்டிய சிம்பு…? அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா..? ரசிகர்களிடையே எழும் மோதல்…!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 2:39 pm

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சிம்புவின் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதானா..? என்று எல்லாம் சொல்லும் நிலை ஏற்பட்ட போது, வெங்கட் பிரபுவின் மாநாடு படம், அவருக்கு நல்ல Come Back-ஐ கொடுத்தது. விமர்சன ரீதியிலும் சரி வணிகரீதியிலும் சரி நல்ல பிளாக் பாஸ்டர் படமாக அந்த படம் அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து, சிம்புவுக்கு இனி வெற்றிப் படங்கள் அமையும் என்று அவரது ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதனால், தற்போது வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு பல ஆண்டு இடைவெளியில் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள இப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாநாடு திரைப்படத்தை விட வெந்து தணிந்தது காடு திரைப்படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ரசிகர்களை புலம்ப வைத்திருக்கிறது. ஆம், சிம்பு பேசியதவாது “நான் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தால், ஒரு ஹாலிவுட் நடிகராகிவிடுவேன். பின் அடுத்து என்ன? இப்போதுள்ள அனைவரும் நான் பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என நினைத்து ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பெரிய ஆள் என்றால் என்னவென்று தெரியவில்லை. எனது வேலை நான் சிறப்பாக செய்தால், அது தான் பெரிய ஆளாக உயர்த்தும்” என பேசிருக்கிறார்.

இதனால் தற்போது ரசிகர்கள் அவர், பாலிவுட்டில் நடித்து வரும் நடிகர் தனுஷை தான் சீண்டி பேசியிருக்கிறார் என பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu