‘முதலில் உங்க குடும்பத்தை கவனிங்க’… நடிகர் சூர்யா ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சிவக்குமார் அட்வைஸ்!!
Author: Babu Lakshmanan21 July 2023, 2:32 pm
நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் சமூக சேவைகள் செய்து வரும் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிவக்குமார், அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் சார்பில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் கடந்த சில நாட்களாக பழங்குடியினர் மக்களுக்கு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு, இ சேவை மையம் அமைத்து தரப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்றும் பழனியில் உள்ள உழவர் சந்தை முன்பாக காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் ,(நெகிழி ) பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இலவசமாக உழவர் சந்தைக்கு வந்த 400 பேருக்கு துணிப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு பழனி உழவர் சந்தையில் துணிப்பைகள் வழங்கி சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் ரசிகர் மன்றத்தினரை பாராட்டிய நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தைமான சிவக்குமார்,
‘ரசிகர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், முதலில் தங்களின் குடும்பத்தை கவனியுங்கள். பின்பு சேவை செய்யுங்கள்,’ என அறிவுரை வழங்கினார்.