விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி அளித்த புகார் : கஷ்டபட்டு சேர்த்த காசு.. கண்கலங்கிய நடிகர் சூரி.!

Author: Rajesh
24 June 2022, 4:12 pm

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்தார். மேலும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது அளித்த புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மிகுந்த கவலையுடன், நான் கஷ்டப்பட்டு சேர்த்த காசு. கடவுள் நிச்சயம் எனக்கு சாதகமான தீர்ப்ப அளிப்பார் என தெரிவித்து இருந்தார்.

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்